உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கல்லுாரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

 கல்லுாரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்

தங்கவயல்: அரசு பி.யு., கல்லுாரிகள், ஸ்ரீ பகவான் மஹாவீர் ஜெயின் கல்லுாரி இணைந்து தங்கவயல் தாலுகா அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்தின. தங்கவயல் சுற்றுப்பகுதிகளில் உள்ள 16 பி.யு., கல்லுாரிகளின் மாணவ - மாணவியர் பங்கேற்ற விளையாட்டுப் போட்டி தங்கவயல் நகராட்சி விளையாட்டு திடலில் நேற்று நடந்தது. மாணவர்களுக்கான தடகள போட்டிகள், கபடி, கோகோ, கைப்பந்து, பந்து எறிதல் ஆகிய போட்டிகள் நடந்தன. வெற்றிப் பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தலைமை வகித்தார். கோலார் தொகுதி ம.ஜ.த., எம்.பி., மல்லேஸ்பாபு, தங்கவயல் போலீஸ் எஸ்.பி., ஷிவன்ஷு ராஜ்புத், தாசில்தார் காயத்ரி பள்ளி கல்வித் துறை அதிகாரி ராஜசேகர், உடற் பயிற்சிகள் கல்வித் துறை அதிகாரி பாபு உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்