மேலும் செய்திகள்
கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
30-Jun-2025
சிவாஜி நகர்: திம்மையா சாலை ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் 154ம் ஆண்டு விழா நாளையும், நாளை மறுநாளும் நடக்கிறது.பெங்களூரு சிவாஜி நகர் திம்மையா சாலையில் ஸ்ரீகாசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் 154ம் ஆண்டு விழா, வரும் 12, 13ம் தேதி நடக்கிறது.முதல் நாளான நாளை மாலையில் கோ பூஜை, கலச ஸ்தாபனம், ஹோமம், பூர்ணாஹூதிக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.இரண்டாம் நாளான 13ல், காலையில் கலச பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது. அதை தொடர்ந்து, அமெரிக்காவின் டல்லாசை சேர்ந்த சஹானா வெங்கடேஸ்வரன், சான்வி வெங்கடேஸ்வரனின் பரதநாட்டியம் நடக்கிறது.சுவாமிக்கு தங்க நாணய அபிஷேகம் நடத்தப்படுகிறது. பின், மஹா மங்களாரத்திக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.
30-Jun-2025