உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு  இன்று முடிவு வெளியீடு

எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு  இன்று முடிவு வெளியீடு

பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.கர்நாடகாவில் கடந்த மார்ச் 21ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுகள் நடந்தன. மாநிலம் முழுதும் 8,96,447 மாணவ -- மாணவியர் எழுதி இருந்தனர். மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 11:30 மணிக்கு, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள, கர்நாடக பள்ளி தேர்வு மற்றும் மதிப்பீடு வாரிய அலுவலகத்தில், தேர்வு முடிவுகளை பள்ளி கல்வி அமைச்சர் மது பங்காரப்பா வெளியிடுகிறார்.மதியம் 12:30 மணிக்கு பின், தேர்வு முடிவுகளை http://karresults.nic.inஎன்ற இணையதளத்தில் சென்று, மாணவ, மாணவியர் பார்த்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை