உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  இங்கிலாந்து பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் திருட்டு 

 இங்கிலாந்து பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் திருட்டு 

ஜீவன்பீமாநகர்: ஹோட்டலில் தங்கியிருந்த இங்கிலாந்து நாட்டு பெண்ணிடம், 1.50 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் விட்னி டபுள்யு வாங், 36. பெங்களூரு பெல்லந்துாரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்தில் மேலாண்மை ஆலோசகராக பணியாற்றுகிறார். கடந்த 5ம் தேதி முதல், 11ம் தேதி வரை, ஜீவன்பீமாநகர் பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். கடந்த 12ம் தேதி பெங்களூரில் இருந்து கென்யாவுக்கு விமானத்தில் பயணம் செய்தார். அவர் தனது கை பையை திறந்து பார்த்த போது, அதில் இருந்த, 1,100 அமெரிக்க டாலர்கள் மற்றும் 300 பிரிட்டிஷ் பவுண்டுகள் என இந்திய மதிப்பில் 1.50 லட்சம் ரூபாய் காணாமல் போனது தெரிந்தது. கென்யா பயணத்தை முடித்துவிட்டு, பெங்களூரு திரும்பிய அவர், ஹோட்டல் ஊழியர்கள் மீது ஜீவன்பீமாநகர் போலீசில் புகார் செய்துள்ளார். ஹோட்டலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்