உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாடியில் இருந்து விழுந்து மாணவி பலி: தற்கொலையா என போலீஸ் விசாரணை

மாடியில் இருந்து விழுந்து மாணவி பலி: தற்கொலையா என போலீஸ் விசாரணை

தொட்டபல்லாபூர்: கல்லுாரி விடுதி கட்டடத்தின், ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்து, ஆந்திர மாணவி இறந்தார். ஆந்திராவின், குந்தகல்லைச் சேர்ந்தவர் வர்ஷிதா, 20. இவர், பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகாவின், நாகதேனஹள்ளி அருகில் உள்ள தனியார், கீதம் பல்கலைக்கழகத்தில், மூன்றாம் ஆண்டு பி.டெக்., படித்தார். கல்லுாரி விடுதியில் தங்கி இருந்தார். கடந்த சில நாட்களாக, வர்ஷிதா மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இரண்டு நாட்களாக, அவர் சாப்பிடவில்லை என, கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவி நேற்று முன்தினம் நள்ளிரவு, விடுதி கட்டடத்தின் ஆறாவது மாடியில் இருந்து விழுந்து இறந்தார். நேற்று காலை இதை பார்த்த விடுதி ஊழியர்கள், மாணவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தொட்டபல்லாபூர் போலீசார், மாணவியின் உடலை மீட்டனர். அவரது பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர். இவர் கடைசியாக தன் பெற்றோருக்கு, ‘ஐ லவ் யூ டாட்; ஐ லவ் யூ மாம்’ என, தந்தை, தாயை விரும்புவதாக மெசேஜ் செய்துள்ளார். எனவே, மாணவி தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் கூறுகின்றனர். இது குறித்து, போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !