காவிரி ஆற்றில் மாணவர் மாயம்
சாம்ராஜ்நகர் : வெள்ளப்பெருக்கை பொருட்படுத்தாமல், காவிரி ஆற்றில் இறங்கி விளையாடிய கல்லுாரி மாணவர், வெள்ளத்தில் மூழ்கி காணாமல் போனார்.பெங்களூரில் தனியார் மருத்துவ கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் சிலர், சுற்றுலாவுக்காக சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகாலுக்கு வந்தனர். நேற்று மதியம் சிவசமுத்ராவின் காவிரி ஆற்றங்கரைக்கு வந்திருந்தனர்.சில நாட்களாக கன மழை பெய்வதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்தது. இதை பொருட்படுத்தாமல், ஆற்றில் இறங்கி விளையாடினர். அப்போது வெள்ளம் அதிகரித்ததால், நீரில் மூழ்கினர். இதை பார்த்த அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன், மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். துஷார், 20, பிரமோத், 23, பிரவுல்லா, 22, ஆகியோரை மீட்டனர். ஆனால் நந்தகுமார், 22, என்ற மாணவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.