மேலும் செய்திகள்
சோழ மண்டல கும்மியாட்டம் அரங்கேற்றம்
08-Jun-2025
பெங்களூரு : மாணவி சி.வி.தன்யாவின் பரதநாட்டியம் அரங்கேறியது.பெங்களூரு நிருத்யகங்கனா நடன பள்ளி சார்பில், ரவீந்திரா கலாஷேத்ரா எதிரில் உள்ள ஏ.டி.ஏ., ரங்கமந்திராவில், 'தன்யம்' என்ற பெயரில் பரதநாட்டியம் அரங்கேற்றம் நடந்தது. பள்ளியின் நடன பயிற்சி குருவான மீரா ஸ்ரீகாந்தின் மாணவி சி.வி.தன்யா, 17, பரதநாட்டியம் அரங்கேறியது. அவரின் பல நடன அசைவுகள், பாராட்டும்படியாக இருந்தது. இவர், மல்லேஸ்பாளையா தனியார் பள்ளியில் பி.யு.சி., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை விஜய், தாய் ஸ்ரீலதா.சிறப்பு விருந்தினர்களான பெங்களூரு பரத நாட்டிய அகாடமி இயக்குநர் காயத்ரி கேசவன், அஞ்சலி, துடிப்பு நடன அகாடமியின் பொன்னு ஆகியோர், சி.வி.தன்யாவுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.
08-Jun-2025