உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு விழாக்களில் மாணவர்களுக்கு தடை

அரசு விழாக்களில் மாணவர்களுக்கு தடை

பெங்களூரு: ''அரசு பள்ளி மாணவர்களை அரசு, தனியார் நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களாக பயன்படுத்தக் கூடாது,'' என பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. கர்நாடகா பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசு பள்ளி மாணவர்களை பள்ளிக்கு வெளியே நடக்கும் அரசு, தனியார் நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களாக ஈடுபடுத்த கூடாது. பள்ளி நேரங்களில் காணொளி மாநாடுகள் நடத்தக்கூடாது. பள்ளி வேலை நாட்களில் அரசு, தனியார் தேர்வுகள் நடத்தக்கூடாது. பள்ளி விடுமுறை நாட்களில் மட்டுமே தேர்வு நடத்த அனுமதிக்கப்பட வேண்டும். இந்த உத்தரவுகளை மீறும் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை