உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கரும்பு விவசாயிகள் போராட்டம் வாபஸ்

கரும்பு விவசாயிகள் போராட்டம் வாபஸ்

ஹாவேரி: டன் கரும்புக்கு 3,600 ரூபாய் வழங்கக்கோரி ஹாவேரி மாவட்ட கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். இவர்கள், பெங்களூரு – புனே தேசிய நெடுஞ்சாலையில், ஹாவேரியின் பங்காபூர் சுங்கச்சாவடி அருகே சில நாட்களாக போராட்டம் நடத்துகின்றனர். இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. வரும் 23ம் தேதி, மாவட்ட நிர்வாகம் தலைமையில் விவசாயிகள், சர்க்கரை ஆலை உரிமையாளர்களுடன் பேச்சு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபடுவதை விவசாயிகள் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர். நெடுஞ்சாலையில் நேற்று யாரும் போராட்டம் நடத்தவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை