உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சட்டசபைக்கு போட்டி: சுமலதா திட்டவட்டம்

 சட்டசபைக்கு போட்டி: சுமலதா திட்டவட்டம்

மாண்டியா: “அடுத்த சட்டசபை தேர்தலில், நான் போட்டியிடுவது உறுதி. எந்த தொகுதி என்பதை பா.ஜ., மேலிடம் முடிவு செய்யும்,” என, முன்னாள் எம்.பி., சுமலதா அம்பரிஷ் தெரிவித்தார். மாண்டியா மாவட்டம், மத்துாரில் நேற்று அவர் அளித்த பேட்டி: அடுத்த சட்டசபை தேர்தலில், நான் போட்டியிடுவது உறுதி. நான் எந்த தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதை, பா.ஜ., மேலிடம் முடிவு செய்யும். ஆனால் நான் மத்துாருக்கு முன்னுரிமை அளிப்பேன். நானோ அல்லது என் மகன் அபிஷேக்கோ சட்டசபை தேர்தலில் சீட் கிடைத்தால், மத்துாரில் போட்டியிடுவோம். கடந்த 2018 லோக்சபா தேர்தலில், மாண்டியாவில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இப்போது, நான் பா.ஜ.,வில் இருக்கிறேன். எனவே கட்சி மேலிடத்தின் முடிவின்படி நடந்து கொள்வேன். கடந்த சட்டசபை தேர்தலில், மத்துாரில் போட்டியிடும்படி பா.ஜ., தலைவர்கள் அழைப்பு விடுத்தனர். ஆனால் எனக்கு மாநில அரசியலில் ஈடுபட, ஆர்வம் இருக்கவில்லை. மத்துார், என் கணவர் அம்பரிஷின் தொகுதி. எனவே வரும் சட்டசபை தேர்தலில் நானோ அல்லது அபிஷேக்கோ, மத்துாரில் போட்டியிட விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை