மேலும் செய்திகள்
அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
15-Oct-2025
பெங்களூரு: குறைந்த விலையில் உணவுப் பொருட்களை வாங்கும் வகையில் அரசு ஊழியர்களுக்கென சூப்பர் மார்க்கெட் அமைப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருவதாக தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் கூறி உள்ளார். கர்நாடகாவில்அரசு ஊழியர்கள் குறைந்த விலையில் உணவு பொருட்களை வாங்கும் வகையில் சூப்பர் மார்க்கெட் திறப்பது குறித்து தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது. தொழில்துறை முதன்மை செயலர் செல்வகுமார், எம்.எஸ்.ஐ.எல்., எனும் மைசூரு விற்பனை சர்வதேச நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு, எம்.பி.பாட்டீல் அளித்த பேட்டி: கர்நாடகாவில், 6 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் குறைந்த விலையில் உணவு பொருட்களை வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட் திறப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. முதற்கட்டமாக பெங்களூரில் 4 முதல் 5 கடைகளை திறக்க ஆலோசித்து வருகிறோம். பின், மாநிலத்தில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும். இதன் மூலம் லட்சக்கணக்கிலான அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் பயன் பெறுவர். சூப்பர் மார்க்கெட் அமைப்பது குறித்து அடுத்த நான்கு வாரங்களுக்குள்எம்.எஸ்.ஐ.எல்.,நிறுவனத்தின் இயக்குநர் மனோஜ் குமார் விரிவான அறிக்கையை தாக்கல் செய்வார். இந்த அறிக்கைய வைத்தே சூப்பர் மார்க்கெட் அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
15-Oct-2025