தமிழ் ஐ.ஏ,எஸ்., அதிகாரி திவ்யா பிரபுக்கு புதிய பொறுப்பு
பெங்களூரு: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி கழக நிர்வாக இயக்குநராக தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, திவ்யா பிரபு நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக பணியாளர் மற்றும் சீர்திருத்த ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கிராம வளர்ச்சி துறை கமிஷனராக பணியாற்றிய திவ்யா பிரபு, கர்நாடக புதுப்பித்தக்க எரிசக்தி வளர்ச்சி துறையின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். கிராம வளர்ச்சி துறை கமிஷனர் பதவியை கூடுதல் பொறுப்பாக அவர் கவனிப்பார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி துறை நிர்வாக இயக்குநர் ருத்ரப்பய்யா, கர்நாடக மின்சார நிறுவன கழகத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.