சாலை விபத்தில் தமிழக நபர் பலி
மடிவாளா: உறவினர் வீட்டுக்கு வந்திருந்த, தமிழகத்தின் நபர் ஒருவர், சாலை விபத்தில் உயிரிழந்தார்.தமிழகத்தின், கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ரமேஷ் ஜோதிமணி, 39. இவரது உறவினர் பெங்களூரின், பொம்மனஹள்ளியில் வசிக்கிறார். இவரை பார்ப்பதற்காக, ரமேஷ் ஜோதிமணி பஸ்சில் பயணித்தார். நேற்று முன்தினம் இரவு 10:15 மணியளவில், கோனேன அக்ரஹாரா அருகில் வந்திறங்கினார்.பொம்மனஹள்ளிக்கு செல்வதற்காக, எலக்ட்ரானிக் சிட்டிக்கு இணைப்பு ஏற்படுத்தும், மேம்பாலம் நுழைவு வாயில் அருகில், சாலையை கடந்து சென்றார். அப்போது வேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் சாலையில் விழுந்த அவர், பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார்.மடிவாளா போக்குவரத்து போலீஸ் நிலையத்தில், வழக்கு பதிவாகியுள்ளது.