உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / தசரா பார்க்க வந்த தமிழக நபர் கொலை

தசரா பார்க்க வந்த தமிழக நபர் கொலை

ஆனேக்கல்: பெங்களூருக்கு தசரா விழாவைக் காண வந்த தமிழகத்தைச் சேர்ந்த நபர், மரக்கட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே சாரகபள்ளி கிராமத்தில் வசித்தவர் எல்லப்பா, 56; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, பெங்களூரு ரூரல் ஆனேக்கல்லுக்கு வந்தார். தனது மனைவியிடம் மொபைல் போனில் பேசிய எல்லப்பா, தசரா கொண்டாட்டத்தைப் பார்க்க ஆனேக்கல்லுக்கு வந்து உள்ளதாகவும், நள்ளிரவு வீட்டிற்கு வருவதாகவும் கூறினார். ஆனால், நேற்று காலை வரை அவர் வீடு திரும்பவில்லை. மொபைல் போனும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஆனேக்கல்லில் வசிக்கும் உறவினர்களிடம், எல்லப்பாவின் மனைவி கூறினார். நேற்று மதியம் ஆனேக்கல் டவுன் சிக்ககெரே மைதான பகுதியில், எல்லப்பா உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரை மர்ம நபர்கள் மரக்கட்டை, கற்களால் தாக்கி கொன்றது, போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது. அவரைக் கொன்றது யார், என்ன காரணம் என விசாரணை நடக்கிறது. கொலையாளிகளைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ