உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வீட்டு வசதி செயலராக தமிழர் மோகன்ராஜ் நியமனம்

வீட்டு வசதி செயலராக தமிழர் மோகன்ராஜ் நியமனம்

பெங்களூரு: கர்நாடக அரசின் நிர்வாக சீர்திருத்த ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:கிருஷ்ணா பாக்யா குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் மோகன்ராஜ், வீட்டுவசதித் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். தொழிலாளர் நல துறை செயலர் ரோகிணி சிந்துாரி, கால்நடை துறை செயலராக, இனி பணியாற்றுவார்.கலபுரகி மண்டல கமிஷனர் ஜெகிரா நசீம், கர்நாடக பட்டு தொழில் கழக நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.மோகன்ராஜ் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !