உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவோர் ஆசிரியர்களே

மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வருவோர் ஆசிரியர்களே

பெங்களூரு: ''ஒவ்வொரு குழந்தையிடமும் தலைமை பண்புகள் உள்ளன. அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வரும் சக்தி ஆசிரியர்களிடம் உள்ளது,'' என முதல்வர் சிவகுமார் பேசினார். அரசு முதல் நிலை கல்லுாரிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கும், 'கல்விசார் தலைமைத்துவ விழா'வை முதல்வர் சிவகுமார் துவக்கி வைத்து பேசியதாவது: கல்லுாரி முதல்வர்கள் மீது மாணவர் அமைப்பும், சமூகமும் நம்பிக்கை வைத்துள்ளனர். திறமையானவர்களுக்கு வாய்ப்பு, ஊக்கம் அளிக்க வேண்டியது நம் கடமை. நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் பொறுப்பு உங்களிடம் உள்ளது. கல்வியை சுயநலத்துக்காக பயன்படுத்தாமல், சிறந்த சமூகத்தை உருவாக்க பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழந்தையிடமும் தலைமை பண்புகள் உள்ளன. அவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வரும் சக்தி ஆசிரியர்களிடம் உள்ளன. சாமானிய மக்களின் பிள்ளைகளும் தலைவர்களாக வளர வேண்டும். குழந்தைகளே ஆசிரியர்களுக்கு பாடம் கற்பிக்கும் அளவுக்கு புத்திசாலியாக உள்ளனர். கல்வி உட்பட அனைத்து துறைகளிலும் மாணவர்கள் முன்னேறி உள்ளனர். அவர்களை கூடுதலாக கவனித்து கொள்ள வேண்டும். பேராசிரியர்கள், முதல்வர்கள் மீதான பொறுப்பு அதிகரித்து உள்ளது. ஒரு குதிரையை பந்தய குதிரையாக மாற்றுவது பெரிய விஷயமல்ல. கழுதையை குதிரையாக மாற்றுவது தான் முக்கியம். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ