உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / வெறி நாய் கடித்து கோவில் காளை மரணம்

வெறி நாய் கடித்து கோவில் காளை மரணம்

மைசூரு:சிகிச்சை அளிக்க தாமதமானதால், வெறி நாய் கடித்த கோவில் காளை உயிரிழந்தது.மைசூரு மேட்டகள்ளியில் மஹாலிங்கேஸ்வரா கோவில் உள்ளது. இக்கோவிலில், 'பசவா' என்ற காளை பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த வாரம், வெறி நாய் ஒன்று, காளையை கடித்தது.இதை பார்த்த அப்பகுதி மக்கள், மாநகராட்சி கால்நடை பிரிவுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் வரவில்லை. இதனால், காளையின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது.எச்சரிக்கை அடைந்த அப்பகுதியினர், காளையை, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மரத்தில் கட்டிவைத்து உணவளித்து வந்தனர். வெகு தாமதமாக வந்த கால்நடை மருத்துவர்கள், காளைக்கு ஊசி போட்டனர். ஆனாலும் காளையின் உடலில் ரேபிஸ் பரவியதால், நேற்று முன்தினம் உயிரிழந்தது.கோவில் வழக்கப்படி, கோவில் அருகில் உள்ள காலி இடத்தில், காளைக்கு மாலை அணிவித்து, பூஜைகள் செய்யப்பட்டன. பின், கோவில் காளை அடக்கம் செய்யப்பட்டது.'கால்நடை மருத்துவர்கள் உரிய நேரத்தில் வந்திருந்தால், கோவில் காளையை காப்பாற்றியிருக்கலாம்' என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி