மேலும் செய்திகள்
மைசூரு ஆரண்யபவனில் 'ரிலாக்ஸ் மூடில்' யானைகள்
06-Aug-2025
மைசூரு : மைசூரு தசரா ஊர்வலத்தில் பங்கேற்க யானைகளுடன் வந்த பாகன்கள், உதவியாளர்களின் பிள்ளைகளுக்காக, அரண்மனை வளாகத்தில் தற்காலிக வகுப்பறை திறக்கப்பட்டு உள்ளது. மைசூரு தசராவில் நடக்கும் ஜம்பு சவாரியில் பங்கேற்க, யானைகளுடன் அதன் பாகன்கள், உதவியாளர்கள் குடும்பத்துடன் வந்து உள்ளனர். இவர்களுக்காக, அரண்மனை வளாகத்தில் தற்காலிக ஷெட் அமைக்கப்பட்டு உள்ளது. பெற்றோருடன் மைசூருக்கு வந்துள்ள அவர்களின் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்பட கூடாது என்பதற்காக, அரண்மனை வளாகத்தில், யானைகள் குளிக்கும் பகுதி அருகில் உள்ள கட்டடம், தற்காலிக வகுப்பறையாக மாற்றப்பட்டு உள்ளது. தற்போது ஒன்பது யானைகளுடன் வந்த குடும்பத்தினரின் 20 பிள்ளைகள் பாடம் படித்து வருகின்றனர். அடுத்த வாரம் வர உள்ள ஐந்து யானைகளின் பாகன்கள், உதவியாளர்கள் குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கும் பாடம் நடத்தப்படும். இப்பிள்ளைகளுக்கு இலவசமாக சீருடை, ஷூ, புத்தகங்கள், மதிய உணவு போன்ற வசதி செய்து தரப்பட்டுள்ளது. இவர்களுக்கு பாடம் எடுக்க, இரு பெண் ஆசிரியைகள், ஒரு ஆண் ஆசிரியர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
06-Aug-2025