தங்கவயல் செக் போஸ்ட்
சகல வசதிகளோடு, 8 'சி'யில் ஆர்.டி.ஓ., ஆபீஸ் கட்டடம் கட்டும் பணி 90 சதவீதம் முடிந்து போச்சுன்னு சொல்றாங்க. அதன் திறப்பு விழாவுக்கு மந்திரி எப்போ வருவார்னு காத்திருக்காங்க. சீக்கிரம் கட்டட பணியை முடிக்கவும், தரமான கட்டடமாக இருக்க வேண்டுமெனவும் ஆபீசர்களுடன் நேரில் பார்வையிட்ட கைக்கார அசெம்பிளிக்காரர் அறிவுறுத்தினாரு.இன்னும் திறப்பு விழாவுக்கு நாளே குறிக்கல. மூன்று நாட்களாக பெய்த மழைக்கு இதன் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்திருக்குது. அரசு பணம் தானே, யார் நம்மை கேள்வி கேட்க போறாங்கன்னு அடாவடியா தரம் கெட்ட வேலையை செய்திருக்காங்க.ஒரே மழையில் காம்பவுண்ட் இடிந்து போச்சு. இப்படித்தான் ஏற்கனவே, அதே பெமல் நகர் ரயில் நிலைய காம்பவுண்ட் கூட இடிந்து விழுந்த முன் உதாரணமும் இருக்குதே. இதுக்கு தானா பல கோடிகளை செலவு செய்றது. கமிஷன் தொகை வாங்குறவங்களின் கண்களை, காண்ட்ராக்ட்காரர் வேண்டுமானால் மூட வைக்கலாம். ஆனால், தரம் கெட்ட வேலையை பொது ஜனம் எப்படி ஏத்துக்குவாங்க?சுட்டெரிக்கும் வெப்பத்தை தணிக்க, கலபுரகியில் டிராபிக் காக்கிகளுக்கு, 'ஏசி ஹெல்மெட்' தராங்க. இதை நாடே வரவேற்கும். கோடை அனல் வெயில், சூறாவளி காற்று, கனமழையால் போக்குவரத்தை கவனிக்கிற காக்கிகள் பாதிக்க கூடாதென, அவர்களுக்கு சிம்பிளா நிழற்குடை கோல்டு சிட்டியிலும் ஏற்படுத்தி இருந்தாலும், அந்த நிழற் குடைகளை, காக்கிகள் பயன்படுத்துறதா தெரியலையே. அவர்களும் மரங்களின் நிழல்களையே நாடுறாங்க.நுாறாண்டு காலமாக இருக்கிற காக்கிகளுக்கான மாவட்டத்தில், இதுவரை, டிராபிக்கை கவனிக்க ஒரு ஸ்டேஷனை ஏற்படுத்தலயே. ஆட்கள் பற்றாக்குறையோ. புதுசா காக்கிகளின் பயிற்சி நிலையமே, 100 ஏக்கரில் வரப்போகுதாம். ஆனாலும், சாலை போக்குவரத்து மீது இப்போதாவது கவனம் செலுத்துவாங்களா? பழைய மைனிங் ஆபீசர்களின் பள்ளி ஹீரோவாக இருந்த காலம் மாறி, தற்போது ஜீரோவாக மாறியிருக்கு. இதுக்கு, பாடம் நடத்த வாத்தி குறைபாடுதான்னு, இதோட மாவட்ட கல்வி ஆபீசரு விளக்கம் சொல்றாரு.மாவட்டத்தில கோல்டு சிட்டி மீது, இனிதான் கல்வித் துறை கவனம் செலுத்துமாம். அதுவும் ஜூன் மாதமே தலைமை வாத்திகளின் கூட்டத்தையும், மாதந்தோறும் டீச்சர்கள் கூட்டத்தையும் கூட்ட போறாங்களாம். அவங்களுக்கு எக்சர்சைஸ் தருவாராம்.கோளாறா இருப்பது ப.பேட்டை அண்ட் கோல்டு சிட்டின்னு இவங்களுக்கு லேட்டா தான் தெரிந்திருக்குதாம். அடுத்த கல்வியாண்டின் ரிசல்ட்டை வேற லெவலுக்கு கொண்டு போறதா இதன் மாவட்ட ஆபீசரு சொல்றாரு. இவங்க வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை பார்க்க தவறி இருப்பதை இப்போதாவது உணர்ந்தால் சரி. 55 பள்ளிகளில் 30 பள்ளிகளின் ரிசல்ட் நோ குட். அடுத்த ஆண்டாவது குட் ரிசல்ட் வருமான்னு பார்க்கலாமே?கோல்டு மைனிங்கின் மொத்த நிலம், 12 ஆயிரம் ஏக்கர் என்கிறாங்க. இது எங்கெங்கு உள்ளதென அடையாளம் காட்ட, அதன் நிர்வாகம் தங்களின் சொத்து என்று பெயர் பலகை வைக்காமல் இருப்பதன் உள் நோக்கம் என்னவோ.ரா.பேட்டை, ஆ.பேட்டை பகுதிகளிலும் இதன் சொத்துகள் மாயமாகி முனிசி.,யின் சொத்தாக பட்டா பதிவும் செய்திருக்காங்களாம். அதேபோல கிராம பஞ்சாயத்துகளுக்கு உட்பட்ட நிலமாகவும், மாநில வருவாய் துறை பதிவேட்டில் பதிவாகி இருக்குதாம். இதனால், மைனிங் சொத்து எதுவரை என்ற கேள்வி, பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்குது. பல ஆயிரம் ஏக்கர் நிலம், பல மாபியா கும்பல் வசம் இருக்குதாம். ஆயினும், மத்திய அரசு இதை சும்மா வேடிக்கை பார்த்து வருவதாக விபரம் தெரிந்தவங்க சொல்றாங்க. வாழும் வீடுகளை சொந்தம் ஆக்க வேணும்னு கோருவது தான் பெருசா பேசுறாங்களே தவிர, பல ஆயிரம் ஏக்கர் நிலத்தை விழுங்கி வருவதை என்ன செய்ய போறாங்களோ. யார் இதற்கு முடிவு கட்டுவாங்களோ?