மேலும் செய்திகள்
மேயர் 'ரேஸ்'; விஜய் 'சஸ்பென்ஸ்'
02-Jun-2026
கோ ல்டு சிட்டியும் கூட, ப.பேட்டை தாலுகாவில் இருக்கும் போது தான் எரகோள் அணையை கட்டினாங்க. கோல்டு சிட்டிக்கும் இதில் இருந்து குடிநீர் வழங்குவதாக சொன்னாங்க. ப.பேட்டையில் இருந்த கோல்டு சிட்டியை பிரித்து, தனி தாலுகாவாக ஆக்கின பிறகு, அந்த அணை நீரை கோல்டு சிட்டிக்கு வழங்க சான்ஸே இல்லையென கைவிரிச்சிட்டாங்க. அப்படின்னா கோல்டு சிட்டிக்கு குடிநீருக்கு என்ன தான் தீர்வு. கோல்டு மைன்ஸ் சுரங்கத்தில் நீர் நிரம்பி உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கிறாங்க. அந்த வற்றாத நீரை தேக்க 'அணை' கட்டி, அதை சுத்திகரிப்பு செய்தாலே போதும். கோல்டு சிட்டிக்கு மட்டுமல்ல, மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு தாராளமாக 'சப்ளை' செய்யலாமாம். தண்ணீரை கேட்டு, பிற மாநிலங்களில் கையேந்த வேண்டிய அவசியமே இல்லையாம். இதெல்லாம் நிபுணர்கள் சொல்லிக் கொண்டே இருந்தாலும், செத்தவங்க காதில் ஓதும் மெல்லிசையாக தான் இருக்கும். உயிரோடு இருக்கும் ஆட்சியாளர் மனதை எப்போ கிள்ளுமோ?
இ தற்கு முன், சி.எம்., பதவியில் இருந்தவருக்கு , அரசியல், செய்தி பிரிவு, நிதித்துறை என பலவற்றுக்கும் செயலர்களாக கோலார்காரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தாங்க. புதியதாக சி.எம்., ஆகி இருக்கும் டிகேசிக்கு அந்தளவுக்கு கோலார் மீது பரிவு இருக்குமோ. ஏற்கனவே, முந்தைய மூணு ஆண்டுகளில் கோலாரை சேர்ந்த ஒருத்தருக்கும் மந்திரி பதவி வழங்கலயே. இப்பவும், ரெண்டு மேலவை உறுப்பினர்கள், நாலு அசெம்பிளிக்காரர்கள் தங்களில் யாருக்கேனும் ஒருத்தருக்கு 'மினிஸ்டர்' பதவி தர வேணுமென, டில்லி, கை கட்சி தலைமையில், பாலுக்கு அலையும் பசித்த பூனைகளாக, அங்கிட்டு இங்கிட்டு என தலைவர்களின் வீடுகளில் திரிந்தாங்க. ஆனால், முதல் சுற்று அமைச்சரவையில் கோலாரை காணவில்லை. கோலாருக்கு என்ன கோளாறோ. என்ன வெறுப்போ. திருநள்ளாறு சனீஸ் வரரை போய் அணுகணுமோ. புதிய சி.எம்., மிக தாராள மனப்பான்மைக்காரர் என நம்புறாங்க. பாவம் அவர் என்ன செய்ய முடியும். அவரோட 'பிக் பாஸ்கள்' தயாரித்த 'லிஸ்ட்' தானே 'ஒர்க் அவுட்' ஆகியிருக்கு!
அ ப்பவே தெரியும்... தலையிருக்க வால் ஆடுமா. ஆடத்தான் விடுவாங்களா... சும்மா மீடியாகாரங்க, 'கோல்டன் சிட்டி மேடம் மினிஸ்டர்' ஆகிறார்னு ஜூன் 2ம் தேதி நள்ளிரவு வரை, அவரின் படத்தை 'போக்கஸ்' செய்தாங்க. எல்லாமே போக்கஸ் என்றாகி விட்டதே. உசுப்பேத்தி உசுப்பேத்தி ஏன் காயப்படுத்துறாங்களோ... அது எப்படிங்க, நைனா சீனியர் இருக்க, அவரோட மகளான ஜூனியருக்கு சான்ஸ் கிடைக்குமா. அதுக்குரிய தகுதி இருந்தாலும், ஒரே குடும்பத்தில் ரெண்டு பேருக்கு மந்திரி பதவி கொடுக்க கை கட்சி மேலிடம் விடுவாங்களா... கோல்டு சிட்டி தொகுதியில் வெற்றிப் பெற்ற அசெம்பிளிக்காரர்கள் இதுவரையில் ஒரே ஒருத்தரும் மினிஸ்டர் ஆனதே இல்லை. இந்த விஷயத்தில் தங்க நகரம் தரித்திர நகரமாகவே பாக்குறாங்களே. பூ கட்சி ஆட்சியில் இருந்தப்போ கூட, கோல்டு சிட்டியில் ஒருமுறைக்கு இருமுறை அசெம்பிளிக்காரர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருத்தருக்கும் அந்த பதவி நாற்காலி கிடைக்கல. கை கட்சி ஆட்சியில் ரெண்டாவது முறையும் வெற்றி பெற்ற கோல்டு சிட்டி மேடமுக்கு, மந்திரி பதவி கிடைக்குதுன்னு பெருமையாக பேசினாங்க. 'அதுக்கு சரிபட்டு வரமாட்டாங்க' என கழித்து விட்டார்களா... அப்படி என்ன தகுதியை தான் அந்த மேலிடம் எதிர்பார்க்குறாங்களோ?
02-Jun-2026