27ல் தங்கவயல் நகராட்சி பட்ஜெட் கூட்டம்
தங்கவயல் : தங்கவயல் நகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது. அன்று நிலைக்குழு தேர்தலும் நடைபெறுகிறது.கடைசியாக 2024 டிசம்பர் 6ல் நகராட்சி உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டம் நடந்தது.அதன் பின்னர் கூட்டம் நடக்கவில்லை. இந்நிலையில், 27ல் நகராட்சிக் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று காலை 10:30 மணிக்கு பொதுக்குழு கூட்டமும் 12:30 மணிக்கு பட்ஜெட் தாக்கலும் நடைபெறுகிறது.