உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நாயை பைக்கில் கட்டி இழுத்து சென்ற கொடூரம்

நாயை பைக்கில் கட்டி இழுத்து சென்ற கொடூரம்

உடுப்பி : உடுப்பி மாவட்டம், யாட்தரே கிராமத்தில் உள்ள பைந்துார் குந்தாப்பூர் ஒரு வழி சாலைக்கு அருகில், ராவுத்தன்கட்டே முதல் நகட்டே பாலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 66 சர்வீஸ் சாலையில், நேற்று முன்தினம் ஒருவர், தன் வளர்ப்பு நாயை பைக்கில் சங்கிலியால் கட்டி தரதரவென இழுத்துச் சென்றார்.துவக்கத்தில், ஈடுகொடுத்து ஓடிய நாயால், சிறிது நேரத்தில் பைக்கின் வேகத்துக்கு ஈடுகொடுத்து ஓட முடியவில்லை. சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டது. இந்த சம்பவங்களை பைக்கின் பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் வீடியோவாக பதிவு செய்தனர். இந்த வீடியோ இணையத்தில் பரவியது.இந்த கொடூர செயலை புரிந்த அடையாளம் தெரியாத பைக் ஓட்டி மீது பைந்துார் போலீசார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர். பைக்கின் நம்பர் பிளேட்டில் உள்ள நம்பரை வைத்து விசாரணையை துவக்கி உள்ளனர். விசாரணையில், அந்நபர் பைந்துாரில் உள்ள படுபித்ரி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் என தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி