மேலும் செய்திகள்
கேழ்வரகிலும் செய்யலாம் புலாவ்!
38 minutes ago
– நமது நிருபர் – காலை அல்லது மாலையில், சுவையான சிற்றுண்டியை சாப்பிட விரும்புகிறீர்களா... அப்படி என்றால் முட்டை பிரட் உப்புமா செய்யுங்கள். இதை தயாரிக்க சில நிமிடங்கள் போதும். செய்முறை:
முதலில் பிரட் ஸ்லைஸ்களின் ஓரங்களை நீக்கிவிட்டு, நடுப்பகுதியை சதுர வடிவில் சிறுசிறு துண்டு களாக நறுக்கவும். அடுப்பில் வாணலி வைத்து, நெய் ஊற்றவும். இதில் பிரட் துண்டுகளை போட்டு, பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றவும். சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு, மூன்று நிமிடம் வதக்கவும். அதன்பின் நறுக்கிய தக்காளி, மஞ்சள் துாள், தனியா துாள், சீரக துாள், உப்பு சேர்த்து நன்றாக கிளறவும். ஒரு கிண்ணத்தில், முட்டையை உடைத்து ஊற்றி, நன்றாக அடித்து கொள்ளவும். இதை தக்காளி, வெங்காய மசாலாவில் ஊற்றி கிளறவும். முட்டை வேகும் வரை மிதமான தீயில் வைத்து, கிளறவும். அதன் பின் அதன் மீது எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லியை துாவினால் சுவையான பிரட், முட்டை உப்புமா தயார். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். செய்வதும் எளிது!
38 minutes ago