மேலும் செய்திகள்
இன்று பெங்களூரில் மாரத்தான் போட்டி
27-Apr-2025
பெங்களூரு: பெங்களூரில் நேற்று நடந்த மாரத்தான் போட்டியில், 25,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.பெங்களூரில் நேற்று, 'டி.சி.எஸ்., வேர்ல்டு 10 கே - 2025' எனும் மாரத்தான் போட்டி பிரமாண்டமாக நடந்தது.இதில், வெளிநாடு, உள்நாட்டை சேர்ந்த முன்னணி தடகள வீரர்கள், வீராங்கனைகள், பொது மக்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.கப்பன் சாலையில் உள்ள ஆர்.எஸ்.ஏ.ஓ.ஐ., கிரிக்கெட் மைதானத்தில் போட்டி துவங்கியது. கவர்னர் தாவர்சந்த் கெலாட், துணை முதல்வர் சிவகுமார், பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, அவரது மனைவி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத், சாந்தி நகர் காங்., - எம்.எல்.ஏ., ஹாரிஸ், மல்லேஸ்வரம் பா.ஜ., - எம்.எல்.ஏ., அஸ்வத் நாராயணா பலர் உடனிருந்தனர்.கப்பன் சாலையில் துவங்கி பீல்டு மார்ஷல் மானெக் ஷா பரேடு மைதானத்தில் முடிந்தது. இப்போட்டி 10 கி.மீ., துாரம்.மாற்றுத் திறனாளிகள், சீனியர் சிட்டிசன்கள் கலந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு ஏற்றவாறு துாரம் மாற்றி அமைக்கப்பப்பட்டது.இதனால், நகரில் உள்ள சில முக்கிய சாலைகளில் அதிகாலை 5:00 முதல் காலை 10:00 மணி வரை வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.மாரத்தானில் வெற்றி பெற்றவர்கள் விபரம்:ஆடவர் பிரிவு: 1. ஆப்ரிக்காவின் உகாண்டா - ஜோசுவா செப்டேகி, 2. ஆப்ரிக்காவின் எரித்தியா - சேமன் டெஸ்பேஜியோர்ஜிஸ், 3. ஆப்ரிக்காவின் கென்யா - வின்சன்ட் லங்கட்.மகளிர் பிரிவு: 1. உகாண்டா - சாரா செலங்கட், 2. கென்யா - சிந்தியா செப்ன்கேனோ, 3. எரித்தியா - குடேனி ஷான்கோ.ஆடவர் பிரிவில் முதலிடம் பிடித்த உகண்டா வீரர் ஜோசுவா செப்டேகி, கடந்த 2014ல் பெங்களூரில் நடந்த மாரத்தான் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த போட்டிக்காக பல நாடுகள், மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு ஓடிய காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.மாரத்தானை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு மெடல், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
27-Apr-2025