உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கண்ணை கவரும் குடகின் மிகப்பெரிய ஏரி

கண்ணை கவரும் குடகின் மிகப்பெரிய ஏரி

– நமது நிருபர் –: குடகு மாவட்டத்தின் ஏராளமான காபி தோட்டங்களுக்கு மத்தியில் ஹொன்னமனே கெரே உள்ளது. இது, குடகு மாவட்டத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய ஏரியாகும். இது, சோம்வாரப்பேட்டையிலிருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள தொட்டமாலத்தே என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. பசுமையான மலைகள், செங்குத்தான பாறைகள், காபி தோட்டங்கள் என பார்க்கும் இடமெல்லாம் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இந்த ஏரி கவி பெட்டா, மோரி பெட்டா ஆகிய இரு மலைகளுக்கு இடையே உள்ளது. இந்த ஏரியை ஒட்டியுள்ள சாலையில் பைக் அல்லது சைக்கிளில் செல்லும் போது அருமையாக இருக்கும். ஏரியை பார்வையிட நுழைவுக் கட்டணம் எதுவுமில்லை. காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பார்வையிட அனுமதி உண்டு. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில் ஏரிக்கு செல்வது சிறப்பு. ஏனெனில், அப்போது தான் நீரின் அளவு அதிகமாக இருக்கும். இப்பகுதியில் ஏராளமான ஹோம்ஸ்டே, ஹோட்டல், ரிசார்ட்டுகள் உள்ளன. எனவே, தங்குவதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. ஏரிப்பகுதியை ஒட்டி ஹொன்னமனே சிவன் கோவில் உள்ளது. இங்கு சாமி தரிசனம் செய்த பிறகு, மொபைல் போனில் படங்கள் எடுத்து மகிழலாம். இந்த இடம் அதிக வெப்பமாக இருக்காது. குளுமையாகவே இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !