உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / அரசு முடிவுக்கு மக்கள் ஆதரவு கோடி மடாதிபதி அறிவுரை

அரசு முடிவுக்கு மக்கள் ஆதரவு கோடி மடாதிபதி அறிவுரை

பெங்களூரு: ''எத்தகைய சூழ்நிலையிலும், நம் நாட்டில் மனித பன்புகளை தியாகம் செய்யக்கூடாது. அரசு எடுக்கும் முடிவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்,'' என்று கோடி மடத்தின் மடாதிபதி ஸ்ரீ சிவானந்த சிவயோகி ராஜேந்திர சுவாமிகள் தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:மன்னர்கள், மஹாராஜாக்களின் காலத்தில் அவர்கள் அருகில் குருக்கள் இருப்பர். அந்த ஆசிரியர், நாட்டு மக்கள் நன்மைக்காக அறிவுரை கூறிக் கொண்டே இருப்பர். குருவின் அறிவுரைகளை, மன்னர்கள் பின்பற்றுவர். இதனால் நாட்டில் நிர்வாகம், அமைதி, செழிப்பு நிலவியது.இந்த நிலை இல்லாதது தான், இன்றைய அரசியல் குழப்பத்துக்கு காரணம். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும், குருவின் கருத்துகளை கேட்பது நல்லது. போர் என்று வரும்போது, இறைவன் அமைதியை ஆதரிக்கிறார்.எத்தகைய சூழ்நிலையில், நம் நாட்டில் மனித பன்புகளை தியாகம் செய்யக்கூடாது. அரசு எடுக்கும் முடிவுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.சமூகத்தில் கோபம் அதிகரித்து வருகிறது. உலக நன்மைக்காக தியானம், வழிபாடு, பூஜைகள் செய்வேன். மனித சமுதாயத்தில் அமைதி இல்லை என்றால், சுனாமி, மழை, காற்று போன்ற இயற்கை பேரழிவுகள் அதிகரிக்கும். இது மக்களை பாதிக்கும். நடப்பாண்டு மழையும், விளைச்சலும் அமோக இருக்கும். மக்கள் பயமின்றி முன்னேற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ