உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சபையின் கவுரவத்தை காப்பாற்ற சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு

சபையின் கவுரவத்தை காப்பாற்ற சபாநாயகருக்கு அதிகாரம் உண்டு

உத்தர கன்னடா: ''சபாநாயகர் காதர், தன் அதிகாரத்துக்கு உட்பட்டு நடந்துள்ளார். சபையின் கவுரவத்தை காப்பாற்ற, எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்ய அவருக்கு அதிகாரம் உண்டு,'' என, மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்தார்.உத்தர கன்னடா மாவட்டம், கோகர்ணாவில் உள்ள ஆத்மலிங்க சுவாமியை, நேற்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தரிசனம் செய்தார். பின், அவர் அளித்த பேட்டி:சட்டசபையின் கவுரவத்தை மதிப்பதும், அதை காப்பதும் எம்.எல்.ஏ.,க்களின் கடமை. சபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால், அவர்களை சஸ்பெண்ட் செய்வதைத் தவிர, சபாநாயகருக்கு வேறு எந்த வழியும் இல்லை. சபாநாயகரின் முடிவு சரியானது தான்.'ஹனி டிராப்' குறித்து அமைச்சர் ராஜண்ணா என்னை சந்தித்து அனைத்தையும் தெரிவித்தார். போலீசில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கடலோர பகுதியில் துறைமுகம் அமைப்பது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.கோகர்ணாவில் ஆத்மலிங்கத்திற்கு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் சிறப்பு பூஜை செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ