உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குமரி வள்ளுவர் பாதத்தில் திருக்குறள் முற்றோதுதல்

குமரி வள்ளுவர் பாதத்தில் திருக்குறள் முற்றோதுதல்

பெங்களூரு திருவள்ளுவர் சங்கம் சார்பில் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையின் கீழ், திருக்குறள் முற்றோதுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும், பெங்களூரு திருவள்ளுவர் சங்கத் தலைவருமான எஸ்.டி.குமார் தலைமையில், 35 பேர் கொண்ட குழுவினர், தமிழகம் சென்றனர். கன்னியாகுமாரியில் திருவள்ளுவர் சிலைக்கு திருவள்ளுவர் சங்கம், தமிழ் அமைப்பினர் மரியாதை செலுத்தினர். பின் திருக்குறள் முற்றோதுதல் நிகழ்ச்சி நடத்தினர்.கன்னியாகுமரியில் இருந்து மதுரையின் கீழடிக்கு குழுவினர் சென்று அருங்காட்சியகத்தை கண்டு ரசித்தனர்.பின், மதுரை வள்ளலார் சங்க தலைவர் சாசங்கனை சந்தித்தனர். விரைவில் சத்ய ஞானசபை சத்திய தர்மசாலை உள்ளடக்கிய பெருவெளி பகுதியை, புனித பூமியாக அறிவிக்க செய்ய வேண்டியது குறித்து, எஸ்.டி.குமார் ஆலோசனை நடத்தினார்.பெங்களூரு திருவள்ளுவர் சங்க செயலர் பிரபாகர், சடகோபன், பேராசிரியர் சரளா, மக்கள் இயக்க துணைத் தலைவர் பன்முகன், விஜயலட்சுமி, சந்திரா உட்பட தமிழ் அமைப்பை சேர்ந்த பலர் சென்றிருந்தனர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ