மேலும் செய்திகள்
ரூ.10 கோடி கஞ்சா ஏர்போர்டில் பறிமுதல்
08-Nov-2025
பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் மூன்று பயணியரிடம் நடத்தப் பட்ட சோதனை யில் 6.50 கோடி ரூபாய் மதிப்பிலான, ஹைட் ரோ கஞ்சா சிக்கியது. பெங்களூரு சுங்க துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, வெளிநாட்டிற்கு ஹைட்ரோ கஞ்சா கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்படி, நவம்பர் 12ம் தேதி (நேற்று முன்தினம்) பயணியரை, சுங்க அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர். இந்த சோதனையின் போது, இரு பயணியர் சூட்கேஸ்களில் இருந்து 15.79 கிலோ எடையுள்ள, ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 5.53 கோடி ரூபாய். இதுபோல கடந்த 11ம் தேதி பாங்காங்கில் இருந்து, பெங்களூரு வந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர், சூட்கேசில் மறைத்து கடத்திய 2.76 கிலோ ஹைட்ரோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இரு வழக்குகளில் 6 கோடியே 49 லட்சத்து 60,000 ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் ஆனது. கடத்தி வந்த மூன்று பயணியர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவாகி உள்ளது. இவ்வாறு செ ய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
08-Nov-2025