உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நண்பர் வீட்டிற்கு சென்ற பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த மூவர் கைது

நண்பர் வீட்டிற்கு சென்ற பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த மூவர் கைது

பரப்பன அக்ரஹாரா; நண்பர் வீட்டிற்கு சென்ற 35 வயது பெண்ணை பின்தொடர்ந்து சென்று, கூட்டு பலாத்காரம் செய்ததுடன், பெண்ணிடம் இருந்து 20,000 ரூபாய் ரொக்கம், வீட்டில் இருந்த பிரிஜ், வாஷிங் மெஷினை கொள்ளையடித்து தப்பிய, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.பெங்களூரு, தொட்டநாகமங்களா சாய் லே - அவுட்டில் வசிப்பவர் 35 வயது பெண். தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். அங்கு வேலை செய்யும் திருமணம் ஆகாத வாலிபருடன் நட்பாக பழகினார். கடந்த 7ம் தேதி இரவு நண்பர் வீட்டிற்கு சென்றார்.வீட்டின் ஹாலில் அமர்ந்து இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது வீட்டிற்குள் புகுந்த மூன்று பேர், பெண்ணையும், அவரது நண்பரையும் பார்த்து, 'விபசாரம் செய்கிறீர்களா, போலீசில் புகார் அளிப்போம்' என மிரட்டினர். பயந்து போன பெண்ணின் நண்பர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இதையடுத்து மூன்று பேரும் சேர்ந்து, பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்ததுடன் 20,000 ரூபாய், பணம் தர வேண்டும் என்றும் மிரட்டினர். பயந்து போன பெண், தன் தோழியிடம் 20,000 ரூபாயை 'போன்பே' மூலம் வாங்கினார். அந்த பணத்தை சூதாட்ட செயலியில் டிபாசிட் செய்யும்படி, மூன்று பேரும் கூறினர். அதன்படி பெண்ணும் செய்தார்.பின், பெண்ணிடம் இருந்து இரண்டு மொபைல் போன்கள், வீட்டில் இருந்த பிரிஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு, வெளியே நின்ற சரக்கு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, மூன்று பேரும் தப்பினர்.பாதிக்கப்பட்ட பெண் நேற்று முன்தினம் பரப்பன அக்ரஹாரா போலீசில் புகார் செய்தார்.கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில், ஹெப்பகோடியை சேர்ந்த ரகு, கெஞ்சேகவுடா, மாதேஷ் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த கூட்டு பலாத்காரத்தில் பெண்ணின் நண்பருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரிடம் விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை