மேலும் செய்திகள்
எஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளை எவ்வளவு?
18-Sep-2025
விஜயபுரா: எஸ்.பி.ஐ., வங்கியில் கொள்ளையடித்த வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து, விஜயபுரா சட்டம் - ஒழுங்கு பிரிவு டெபுடி எஸ்.பி., ஹிதேந்திரா நேற்று அளித்த பேட்டி: விஜயபுரா, சடசனாவில் உள்ள எஸ்.பி.ஐ., வங்கியில், செப்டம்பர் 16ம் தேதியன்று கொள்ளை நடந்தது. முகமூடி அணிந்து வந்த மர்மகும்பல், வங்கி ஊழியர்களை துப்பாக்கி, கத்தி காட்டி மிரட்டி கட்டிப்போட்டு, 1.04 கோடி ரூபாய் ரொக்கம், 20 கிலோ தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரை அடுத்து, விசாரணை நடத்திய போலீசார், கொள்ளையில் தொடர்பு கொண்ட முக்கியமான குற்றவாளியை, மஹாராஷ்டிராவில் கடந்த 7ம் தேதி கைது செய்தனர். இவரிடம் இருந்து 55 கிராம் தங்க வளையல்கள், ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இவர் கொடுத்த தகவலின்படி, இவருக்கு சட்டவிரோதமாக துப்பாக்கிகள் சப்ளை செய்த, பீஹாரை சேர்ந்த ராகேஷ்குமார் சஹானி, 22, ராஜ்குமார் பாஸ்வான், 21, ரக்ஷக்குமார் மாதோ, 21, ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஆயுதங்களை கொடுத்ததுடன், கொள்ளையிலும் ஒத்துழைத்துள்ளனர். இந்த கொள்ளையில், இதுவரை 86,31,220 ரூபாய் ரொக்கம், 9.01 கிலோ தங்கநகைகள் மீட்கப்பட்டுள்ளன. மிச்சமுள்ள பணத்தையும், நகைகளையும் மீட்போம். இவ்வாறு அவர் கூறினார்.
18-Sep-2025