மூவர் உடல்கள் தோண்டி எடுப்பு
விஜயநகரா: வீட்டில் புதைக்கப்பட்ட மூன்று பேரின் உடல்கள் நேற்று மதியம் தோண்டி எடுக்கப்பட்டன. இதுதொடர்பாக, விஜயநகரா எஸ்.பி., ஜான்ஹவி, நேற்று அளித்த பேட்டி: விஜயநகரா மாவட்டம், கொட்டூரை சேர்ந்த அக்ஷய்குமார் என்பவர், நேற்று முன்தினம் மதியம், திலக் நகர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். பெங்களூரில் தன் தந்தை, தாய், தங்கை காணாமல் போன தாக தெரிவித்தார். விசாரணையில், தன் தந்தை பீமராஜ், தாய் ஜெயலட்சுமி, தங்கை அம்ருதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மூவரின் உடல்களையும் பெங்களூரில் உள்ள வீட்டில் புதைத்ததாக தெரிவித்தார். நேற்று மதியம், உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டது. கைதான அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.