உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  தர்ஷன் ரசிகர்கள் மூவருக்கு ஜாமின்

 தர்ஷன் ரசிகர்கள் மூவருக்கு ஜாமின்

பெங்களூரு: சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், சாட்சியை மிரட்டியதாக கைது செய்யப்பட்டுள்ள தர்ஷன் ரசிகர்கள் மூவருக்கு, நீதிமன்றத்தால் ஜாமின் வழங்கப்பட்டு உள்ளது. நடிகர் தர்ஷனின் தோழி பவித்ரா கவுடாவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய, சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி, 2024ல் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில், தர்ஷன், பவித்ரா கவுடா சிறையில் உள்ளனர். இந்த வழக்கின், 19வது சாட்சியாக துமகூரை சேர்ந்த பார் கேஷியர் சந்தீப் என்பவர் உள்ளார். இவரை தர்ஷனின் ரசிகர்கள் புனித், சுகாஷ், வேணு ஆகியோர் காரில் கடத்தி சென்று மிரட்டியதாக, நீதிபதியிடம் சந்தீப் புகார் அளித்தார். இதனால், புனித், சுகாஷ், வேணு ஆகிய மூவரும், காமாட்சிபாளையா போலீசாரால், 2ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள், தங்களுக்கு ஜாமின் வேண்டும் என, 59வது செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். இந்த மனு மீதான விசாரணை, நேற்று நடந்தது. மூவருக்கும் ஜாமின் வழங்கி, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும், பெங்களூரை விட்டு வெளியே செல்லக்கூடாது; விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக வேண்டும்; சாட்சிகளை தொடர்பு கொள்ள கூடாது என நிபந்தனைகளை விதித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !