உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நின்றிருந்த லாரி மீது கார் மோதி மூவர் பலி

நின்றிருந்த லாரி மீது கார் மோதி மூவர் பலி

பெங்களூரு: சேடம் தாலுகாவின், மளகேடா கிராமம் அருகில் வேகமாக சென்ற கார், சாலையில் நின்றிருந்த லாரி மீது மோதியதில், மூவர் உயிரிழந்தனர்.கலபுரகி மாவட்டம், சேடம் தாலுகாவின்மளகேடா கிராமத்தின் அருகில் நேற்று காலை கார் ஒன்று அதிவேகமாக சென்று கொண்டிருந்தது.அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரம் நின்றிருந்த லாரி மீது மோதியது. மோதிய வேகத்தில் கார் நொறுங்கியது. இதில் பயணித்த மகேஷ், 32, பிரேம்குமார், 25, அன்ன தானய்யா, 25, ஆகியோர் உயிரிழந்தனர். நித்யானந்தா என்பவர் காயமடைந்தார். தகவல் அறிந்து அங்கு வந்த மளகோடா போலீசார், மூவரின் உடல்களையும் மீட்டனர். காயமடைந்தவரை மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், திருமண அழைப்பிதழ் கொடுக்க தங்களின் உறவினர் வீடுகளுக்கு செல்லும் போது, விபத்து நடந்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை