மேலும் செய்திகள்
2ம் ஆண்டு பி.யு., மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு
01-Mar-2026
ஒயிட்பீல்டு: வீட்டின் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய மூடியை திறந்த போது, விஷவாயு தாக்கி வீட் டின் உரிமையாளர், காப்பாற்ற வந்த இருவர் என மூவர் உயிரிழந்தனர். பெங்களூரு ஒயிட்பீல்டு இம்மடிஹள்ளி பகுதியை சேர்ந்தவர் முனிசாமப்பா, 67. 12 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தன் வீட்டின் சாக்கடை கால்வாயை நேற்று முன்தினம் சுத்தம் செய்ய தீர்மானித்தார். அதன்படி அன்று மாலை சாக்கடை கால்வாய் மூடியை திறந்தபோ து, விஷவாயு தாக்கி மயங்கினார். இதை பார்த்த பணிக்கு வந்திருந்த பிளம்பர் ருத்ரகுமார், 40, அவரை மீட்க முயற்சித்து அவரும் மயங்கினார். இதை பார்த்த டெலிவரி செய்ய வந்த விஸ்வநாத் ஆச்சார், 24, இருவரையும் காப்பாற்ற முயற்சித்து அவரும் மயங்கினர். இதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள், மூவரையும் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், மூவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
01-Mar-2026