உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / புலி கொலையில்  மேலும் மூவர் கைது

புலி கொலையில்  மேலும் மூவர் கைது

சாம்ராஜ்நகர் : புலி கொலை வழக்கில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இத்துடன் கைது எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது. சாம்ராஜ்நகர் ஹனுார் தாலுகா பச்சேடோடி கிராம பகுதியில் கடந்த 2ம் தேதி, 12 வயதுள்ள பெண் புலி இறந்து கிடந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். விசாரணையில், புலியை விஷம் வைத்து கொன்றது தெரிய வந்தது. பச்சேடோடி கிராமத்தை சேர்ந்த பச்சேத்மல்லு, மஞ்சுநாத் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, அதே கிராமத்தை சேர்ந்த கணேஷ், கோவிந்தேகவுடா, சம்பு ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது குறித்து வனத்துறை அதிகாரிகள் நேற்று கூறியதாவது: மேய்ச்சலுக்காக வரும் ஆடு, மாடுகளை புலி தொடர்ந்து வேட்டையாடி உள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கால்நடை மேய்ப்பவர்கள், புலியை கொலை செய்ய திட்டமிட்டனர். இதன்படி, பசுவின் இறைச்சியில் விஷத்தை வைத்து புலியை கொலை செய்தனர். இறைச்சியை சாப்பிட்டு இறந்த புலியின் உடலை பல துண்டுகளாக சிதைத்து, கொலையை மறைக்க முயற்சி செய்து உள்ளனர். இதை அவர்கள் ஒப்பு கொண்டனர். இது குறித்து கிராமத்தில் உள்ள மேலும் சிலரிடம் விசாரிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களுக்கு நேற்று கொள்ளேகால் மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. இவ்வாறு கூறினர். மைசூரு பா.ஜ., -எம்.பி., யதுவீர் கூறுகையில், ''கர்நாடகாவில், இந்த ஆண்டில் ஆறு புலிகள் கொல்லப்பட்டு உள்ளன. இருப்பினும், மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. வன விலங்குகள் பாதுகாப்பில் மாநில அரசு செயலிழந்துவிட்டது. முந்தைய ஆண்டுகளில் நடந்த சம்பவங்களில் இருந்து பாடம் கற்று கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும். ஆனால், அவர்கள் செயல்படுவது போல தெரியவில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை