உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மாணவியை கடத்த முயற்சி  மூன்று பேருக்கு வலைவீச்சு

 மாணவியை கடத்த முயற்சி  மூன்று பேருக்கு வலைவீச்சு

மங்களூரு: கல்லுாரிக்கு சென்ற மாணவியை கடத்த முயன்ற: தேடுகின்றனர்.: தட்சிண கன்னடாவின் பெல்தங்கடியில் வசிக்கும் தம்பதியின் மகள், 16 வயது சிறுமி. தனியார் கல்லுாரியில் பி.யு., முதலாம் ஆண்டு படிக்கிறார். நேற்று காலை வீட்டில் இருந்து கல்லுாரிக்கு ஸ்கூட்டரில் சென்றார். அவரை பின்தொடர்ந்து காரில் மூன்று பேர் சென்றனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் ஸ்கூட்டரை வழிமறித்த மூன்று பேரும், மாணவியை வலுக்கட்டாயமாக பிடித்து காரில் ஏற்ற முயன்றனர். அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அபுசாலி என்பவர் வந்தார். இதனால், பயந்து போன மூன்று பேரும், மாணவியின் கையில் கத்தியால் குத்திவிட்டு காரில் தப்பினர். மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடத்த முயன்ற மூன்று பேரையும் போலீசார் தேடுகின்றனர். காதல் விவகாரம் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி