உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் அதிரடி இடமாற்றம் 

 மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் அதிரடி இடமாற்றம் 

பெங்களூரு: கர்நாடகாவில் மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மூன்று பேர் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த ஆணையம் வெளியிட்ட அறிக்கை:  கர்நாடக மாநில ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி.,யாக பணியாற்றிய சந்தீப் பாட்டீல், வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.  வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக இருந்த சேத்தன் சிங் ரத்தோட், சி.ஐ.டி., பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாக இனி பணி செய்வார்.  காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனுபம் அகர்வால், கர்நாடக மாநில ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை