மேலும் செய்திகள்
சாலை விபத்தில் ஐந்து நண்பர்கள் பரிதாப பலி
30-May-2026
ஹாசன்: பெங்களூரை சேர்ந்த, 10 நண்பர்கள், இரண்டு நாட்களுக்கு முன், தர்மஸ்தலாவுக்கு சுற்றுலா சென்றனர். அங்கு மஞ்சுநாத சுவாமியின் தரிசனம் முடிந்த பின், பெங்களூருக்கு புறப்பட்டனர். வழியில் ஹாசன் மாவட்டத்தின், கோரூர் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற ஷெட்டிஹள்ளி சர்ச் அருகில் உள்ள ஹேமாவதி அணையில் நீச்சலடித்து விளையாட சென்றனர். ஆனால் இவர்களுக்கு நீச்சல் சரியாக தெரியாது. நீச்சல் தெரியாததா ல், சரண், 20, மிலன், 23, மணிகண்டா, 20, ஆகியோர் நீரில் மூழ்கினர். இதை பார்த்து பயந்த மற்ற நண்பர்கள், நீரில் இருந்து கரைக்கு வந்து, உதவி கேட்டு கூச்சலிட்டனர்.ஆனால் அங்கு யாரும் இல்லாததால், மூன்று இளைஞர்களும் நீரில் மூழ் கி உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த கோரூர் போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன், மூவரின் உடல்களையும் வெளியே எடுத்தனர். முதற்கட்ட விசாரணையில் இவர்கள் நீச்சல் தெரியாமல் நீரில் இறங்கியதே காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
30-May-2026