உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / நாளை விமான சாகச கண்காட்சி டிக்கெட் வைத்திருப்போருக்கு அனுமதி

நாளை விமான சாகச கண்காட்சி டிக்கெட் வைத்திருப்போருக்கு அனுமதி

நாளை (27ம் தேதி) நடக்கும் விமான சாகச நிகழ்ச்சிக்கு, டிக்கெட் வாங்கியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. கடந்தாண்டை போலவே இந்தாண்டும், இந்திய விமானப்படையின் விமான சாகச கண்காட்சி நடக்கிறது. இதற்கான ஒத்திகையில், கடந்த இரண்டு நாட்களாக 'சாரங்க்' ஹெலிகாப்டர் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். பன்னி மண்டபம் டார்ச்லைட் பரேடு மைதானத்தில் நடக்கும் இந்த ஒத்திகையை காண, நகரின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகை தருவர். 30 நிமிடங்கள் வரை வானத்தில் இதய வடிவம், மோதுவது போன்று ஓட்டுவது, செங்குத்தாக செல்வது, வளைந்து வளைந்து ஓட்டுவது, அதிவேகமாக கடப்பது என மாயாஜாலத்தை நிகழ்த்தி காட்டினர். மைதானத்தின் அருகில் வசிப்பவர்கள் அவரவர் வீடுகளின் மொட்டை மாடியில் நின்றபடி ஹெலிகாப்டரின் சாகசத்தை ரசிக்கின்றனர். ஒத்திகை முடிந்த பின், மண்டஹள்ளி விமான நிலையத்தில் தரையிறக்கின. பின், சித்தார்த்தா நகரில் உள்ள விமானப்படை தேர்வு வாரிய அலுவலகத்தில், சாரங்க் ஹெலிகாப்டர் குழுவினர் அறிமுகம் செய்யப்பட்டனர். நாளை நடக்கும் விமான சாகச நிகழ்ச்சியில், டிக் கெட் வாங்கியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சாரங்க் ஹெலிகாப்டர் சாகசம் குறித்து பைலட்கள் விளக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை