உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக...

ஆன்மிகம் மஹா சிவராத்திரி  மஹா சிவராத்திரியை முன்னிட்டு, பெங்களூரு பிரதோஷா பூஜை குழு சார்பில் கணபதி பூஜை, மஹான்யசம் - மாலை 5:00 மணி; அகண்ட ருத்ராபிஷேகம் - 6:15 மணி. இடம்: பிராமண சமூகம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு. தொடர்புக்கு : 97390 84469, 94484 69249.  அங்காள பரமேஸ்வரி, சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் - அதிகாலை 5:00 மணி; மஹா மங்களாரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கல் - 9:00 மணி; அங்கா பரமேஸ் வரி கீதை குழுவினரின் பக்தி திருவிழா - 11:00 முதல் மதியம் 2:00 மணி வரை; நாதஸ்வர மங்கல இசை - மாலை 6:00 முதல் இரவு 10:00 மணி வரை; மஹாமங்களாரத்தி - 10:00 மணி. இடம்: ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், சிவாஜி நகர்.  ருத்ராபிஷேகம் - அதிகாலை 4:00 முதல் 5:00 மணி வரை; மஹாமங்களாரத்தி - 6:00 மணி; மஹா மிருதுஞ்செய ஹோமம் - 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை; பூர்ணாஹூதி - 12:00 மணி. இடம்: ஸ்ரீ சதாசிவ கோவில், கே.எஸ்.எப்.சி., லே - அவுட் அருகில், லிங்கராஜபுரம். தொடர்புக்கு : 96800 72329.  நான்கு கால பூஜை, அபிஷேகங்கள், பூஜைகள் - மாலை முதல் மறுநாள் மதியம் வரை. இடம்: தின்தினி மவுனகுரு மடம், காக்ஸ்டவுன்.  ஐந்து கால பூஜைகள் - மாலை முதல் மறுநாள் மதியம் வரை. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.  ஐந்து கால பூஜைகள் - மாலை முதல் மறுநாள் மதியம் வரை. இடம்: ஸ்ரீ கவி கங்காதேஸ்வரா கோவில், கவிபுரம், பசவனகுடி.  முதல் கால பூஜை - மாலை 6:00 மணி; இரண்டாவது கால பூஜை - இரவு 9:00 மணி; மூன்றாவது கால பூஜை - நள்ளிரவு 12:00 மணி; நாளை நான்காவது கால பூஜை - அதிகாலை 4:00 மணி; ஊர்வலம், பிரசாதம் வழங்கல் - 6:00 முதல் 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், சிவாஜி நகர்.  பஞ்ச புன்னியாகவசனம், சுக்த்த அபிஷேகம் - காலை 7:30 மணி; மஹா மங்களாரத்தி - 9:00 மணி; ஏகதசமஹன்யாச ருத்ர பாராயணம் ஆரம்பம் - மதியம் 3:00 மணி; முதல் கால அபிஷேகம் ஆரம்பம் - மாலை 5:00 மணி; இரண்டாவது கால அபிஷேகம் ஆரம்பம் - இரவு 9:00 மணி; மூன்றாம் கால அபிஷேகம் - நள்ளிரவு 12:00 மணி; பரதநாட்டியம், வீணை கச்சேரி, தேவாரம், திருவாசகம், திருப்புகழ் பஜனை - மாலை 6:30 முதல் மறுநாள் அதிகாலை 5:00 மணி வரை; நாளை ருத்ரஹோமம் ஆரம்பம், நான்காம் கால அபிஷேகம், மஹா மங்களாரத்தி - 4:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ ஏகாம்பரேஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர்.  முதல் கால பூஜை - மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை; இரண்டாம் கால பூஜை - 10:00 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை; மூன்றாம் கால பூஜை - அதிகாலை 1:00 முதல் 3:00 மணி வரை; நான்காம் கால பூஜை - 4:00 முதல் 6:00 மணி வரை. இடம்: ஸ்ரீ அன்னபூர்னேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம்.  அபிஷேகம் - மாலை 5:00 முதல் மறுநாள் அதிகாலை 4:00 மணி வரை. இடம்: ஸ்ரீ மகான் ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு.  காசி விஸ்வநாதேஸ்வரர், காசி விசாலாட்சிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் - காலை 9:00 மணி; காசி விஸ்வநாதேஸ்வரருக்கும், காசி விசாலாட்சி அம்பாளருக்கும் ருத்ராபிஷேகம், அலங்காரம், சிவ அஷ்ட்டோத்திரம், அஷ்ட்டாவதான சேவை, மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - மாலை 6:00 மணி; ருத்ராபிஷேகம், அலங்காரம், ஸ்ரீ ருத்ர திரிசிதி அர்ச்சனை, அஷ்டாவதான சேவை, மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - இரவு 10:00 மணி; நாளை ருத்ராபிஷேகம், அலங்காரம், சிவ சக்ஸ்ரநாம அர்ச்சனை, அஷ்டாவதான சேவை, மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - அதிகாலை 1:30 மணி; காசி விஸ்வநாதேஸ்வரருக்கு ருத்ராபிஷேகம், காசி விசாலாட்சி அம்பாளுக்கு மங்கல சூக்த்தாதிகள் அபிஷேகம், அலங்காரம், தத்வார்ச்சனை, அஷ்டாவதான சேவை, மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - 4:00 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.  விநாயகருக்கு அபிஷேகம் - காலை 6:00 மணி; ருத்ராபிஷேகம் - 10:00 மணி; மஹா சிவராத்திரி விழா துவக்கி வைப்பு, ரூபஸ்ரீ அரவிந்த் குழுவினர் மற்றும் ரித்திகாவின் பரதநாட்டியம் - இரவு 7:00 மணி; சென்னை சசி ரிதம்ஸ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி - 8:00 மணி; நாளை அபிஷேகம், பக்தி சொற்பொழிவு, பக்தி படம் திரையிடல் - அதிகாலை 2:00 மணி; அபிஷேகம் - 4:00 மணி; சிறப்பு அன்னதானம் - மதியம் 12:00 மணி. இடம்: ஸ்ரீ ஜெயசித்தி வலம்புரி விநாயகர் மற்றும் சிவமணி கோவில், ஜெயராஜ் நகர், ருத்ரப்பா கார்டன்.  ருத்ராபிஷேக அபிஷேகம், மஹா மங்களாரத்தி - காலை 8:00 முதல் 9:30 மணி வரை; 108 சங்கு அபிஷேகம், மஹா மங்களாரத்தி - மாலை 5:30 முதல் இரவு 8:30 மணி வரை; நாளை மஹா அபிஷேகம், மஹா மங்களாரத்தி - அதிகாலை 4:30 முதல் 6:00 மணி வரை. இடம்: ஸ்ரீ மாரியம்மன் கோவில், ஜெய்பாரத் நகர்.  ஸ்ரீ மரகதேஸ்வர சுவாமிக்கு அபிஷேகம் - மாலை 6:00 முதல் நாளை காலை 6:00 மணி வரை. இடம்: ஸ்ரீ நாகம்மா தேவி கோவில், செயின்ட் ஜான்ஸ் சாலை, சிவன் ஷெட்டி கார்டன்.  தீப ஆராதனை, காப்பு கட்டுதல் - காலையில்; மஹாகாளி பலி பூஜை - நள்ளிரவு 12:00 மணி; மயான கொள்ளை, மஹா மங்களாரத்தி, அன்னதானம் - மதியம் 1:00 மணி. இடம்: ஸ்ரீ கர்பனாம்பாள் கோவில், ஹெயின்ஸ் சாலை, நேருபுரம்.  கலச ஊர்வலம் - காலை 8:00 மணி; முதல் பிரஹார பூஜை - 8:30 முதல் 9:30 மணி வரை; இரண்டாவது பிரஹார பூஜை - 11:30 முதல் மதியம் 12:30 மணி வரை; மூன்றாவது பிரஹார பூஜை - நாளை அதிகாலை 2:30 முதல் 3:30 மணி வரை; நான்காவது பிரஹார பூஜை - 5:30 முதல் 6:30 மணி வரை. இடம்: யோக போக நந்தேஸ்வர சுவாமி கோவில், சிவ தர்ஷன் அபார்ட்மென்ட், இன்பேன்டரி சாலை, சிவாஜி நகர்.  அபிஷேகம், அலங்காரம், ஆராதனை - கா லை 6:00 மணி; முதல் கால பூஜை - மாலை 6:00 மணி; இரண்டாவது கால பூஜை - இரவு 8:00 மணி; மூன்றாவது கால பூஜை - 10:00 மணி; நான்காவது கால பூஜை - நள்ளிரவு 12:00 மணி; ஐந்தாவது கால பூஜை - நாளை அதிகாலை 2:00 மணி; ஆறாவது கால பூஜை, ருத்ர பூஜை - 4:00 மணி; நித்ய பூஜை, மஹா மங்களாரத்தி - 6:00 மணி வரை. இடம்: ஓம் ஸ்ரீ அங்காலிங்கேஸ்வரர் கோவில், கவுதமபுரம், ஹலசூரு.  சிறப்பு அபிஷேகங்கள், பிரம்ம ரதோத் சவம் - மாலை முதல் நாளை மதியம் 12:00 மணி வரை. இடம்: ஸ்ரீ காடு மல்லிகார்ஜுன சுவாமி கோவில், சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.  மஹா மங்களாரத்தி - மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை; தேர் திருவிழா - 10:00 மணி; காளி பூஜை - நள்ளிரவு 12:00 மணி; அன்னதானம் - நாளை மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை; பூஜை, மயான பூஜை - 5:00 மணி. இடம்: ஸ்ரீ ராஜா காளி அம்மன் கோவில், கஸ்துாரி நகர் பிரதா ன சாலை, பி.சன்னசந்திரா.  சிவராத்திரி பூஜை, மஹா மங்களா ரத்தி, மயான கொள்ளை பூஜை - இரவு 9:00 மணி; சிவராத்திரி பூஜை - நாளை இரவு 9:00 மணி. இடம்: ஸ்ரீ ஓம் சக்தி மஹா காளியம்மாள் கோவில், ஓல்டு பாகலுார் லே - அவுட், சகாயபுரம்.  காடு மல்லேஸ்வரா நண்பர்கள் சங்கம் சார்பில் பக்தி பாடல்கள், பரதநாட்டியம் - மாலை 6:00 முதல் மதியம் 1:00 மணி வரை. இடம்: காடு மல்லேஸ்வரா திறந்தவெளி அரங்கம், மல்லேஸ்வரம்.  ஸ்ரீ காமாட்சி சமேத பால சோமேஸ்வரர் கோவி லில், சிவராத்திரி பூஜை. விரதம் கடைப்பிடித்து முதல் கால பூஜை; நேரம்: மாலை: 6:00 மணி முதல் அடுத்த நாள் விடியற்காலை 3:00 மணி வரை; அதனை அடுத்து அபிஷேகம், அர்ச்சனை. 16ம் தேதி காலை 9:00 முதல் மதியம் 12:00 மணி வரை 2வது கால பூஜை, மதியம், 12:00 மணி முதல் பகல் 3:00 மணி வரை 3ம் கால பூஜை, அதனை தொடர்ந்து மாலை 6:00 மணி வரை 4ம் கால பூஜை. பின், ரு த்ராபிஷேகம்: இடம்: பால் சோமேஸ்வரர் கோவில் உரிகம் பேட்டை, தங்கவயல்.  சிவ பூஜைகள், மாலை 7:00 மணி முதல் துவங்கி விடிய விடிய நடைபெறும். ருத்ராபிஷேகம்; நேரம்: இரவு 10:00 மணி முதல் பக்தி கச்சேரி, பஜனைகள், அபிஷேகம். மறுநாள் 16ம் தேதி காலை 9: 00 மணிக்கு ர த உற்சவம்; இடம்: கோடிலிங்கேஸ்வரா கோவில், கம்மசந்திரா, தங்கவய ல் -பேத் பேதமங்களா சாலை.  அபிஷேகம், புஷ்பலங்காரம், ராழணசுரோத்சவம், ருத்ரோத்சவம்- இரவு, 10:00 மணி முதல். இடம்: லலிதாம்பிகை சமேதா ராமலிங்கேஸ்வரா கோவில், கீதா சாலை ராபர்ட்சன் பேட்டை.  இரவு 8:00 மணி முதல் தொடர்ந்து சிவ பூஜைகள். இரவு 12:00 மணிக்கு அபிஷேகம், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், பக்தி பஜனைகள். இடம்: சோமேஸ்வரர் சுவாமி கோவில், பழைய மாரிகுப்பம், ஆண்டர்சன் பேட்டை. அதிருத்ரம் 2026  ஸ்ரீராமகிருஷ்ணா பஜனை சபா அறக்கட்டளை சார்பில் 'அதிருத்ரம் 2026' விழாவை ஒட்டி, கணபதி ஹோமம் - காலை 5:30 மணி ; மஹன்யாச ஜெபம், அதிருத்ர ஜெபம், அபிஷேகம், அதிருத்ர சங்கல்பம், கிராமார்ச்சனை தச தானம், ருத்ர ஹோமம், வசூர்தாரா, பூர்ணாஹூதி - 6:30 முதல் மதியம் 1:30 மணி வரை; பகவத் பிரசாதம் - 2:00 ம ணி. இடம்: சூர்யநாராயணா கல்யாண மண்டபம், தொம்மலுார், பெங்களூரு. லேசர் ஷோ  அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது நடனம்  எட்டு முதல் 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நடன பயிற்சி - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை, இடம்: நியூயார்க் நடன வகுப்பு, 49, ரங்கா காலனி சாலை, இரண்டாவது ஸ்டேஜ், பி.டி.எம்., லே - அவுட். சமையல் பயிற்சி  ஆர்ட் ஆப் பேக்கிங் - மாலை 3:00 முதல் 5:00 மணி வரை, இடம்: ஸ்மால் வோர்ல்டு, 136, எஸ்.டி.பெட், காவேரி காலனி, கோரமங்களா. பயிற்சி  இலவச யோகா வகுப்புகள் - காலை 10:30 முதல் 11:30 மணி வரை; மாலை 4:30 முதல் 5:30 மணி வரை, மேலும் விபரங்களுக்கு 080 - 2357 9755, 2579 1143, 99457 00168, 98455 57078. இடம்: அறக்கட்டளை வளாகம், 148, முதலாவது 'ஆர்' பிளாக், இஸ்கான் கோவில் அருகில், ராஜாஜி நகர்.  ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி, யோகா - காலை 6:30 மணி; கராத்தே - மாலை 5:30 மணி; யோகா - மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.  களி மண்ணில் வடிவம் கொடுத்தல் - மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை; 3:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஸ்டோரி ஜோன், மூன்றாவது தளம், ஒன்பதாவது பிரதான சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட்.  ஓவியம் வரைய பயிற்சி - மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை, இடம்: மின்ஸ்க் ரெஸ்டோபார், ஆறாவது தளம், 222, முதல் குறுக்கு சாலை, பி.டி.எம்., முதல் ஸ்டேஜ். இசை  கன்னடா, இந்தி ஜாமிங் - மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சில்லா தி கார்டன் கபே, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.  ஜாம் வித் பரத் சிஜே - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: நேடிவ் பார் அண்ட் இந்தியன் கிட்சன், 421 கியூ, ஸ்ரீகிருஷ்ணா டெம்பிள் சாலை, முதலாவது ஸ்டேஜ், இந்திரா நகர்.  தெலுங்கு ஜாமிங் - இரவு 7:00 முதல் 10:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 95, மூன்றாவது தளம், 15வது குறுக்கு சாலை, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். காமெடி  காமெடி நைட் - இரவு 7:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு காமெடி கிளப், இரண்டாவது தளம், பிரிகேட் சாலை, சாந்தாலா நகர்.  இம்ப்ரூவ் காமெடி ஜாம் - இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: சர்ச் ஸ்டிரீட் சோஷியல், 46/1, நான்காவது சர்ச் தெரு, சாந்தாலா நகர், அசோக் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை