மேலும் செய்திகள்
இன்று இனிதாக (24.06.2026) பெங்களூரு
24-Jun-2026
ஆன்மிகம் மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா. மகிழ்ச்சியாக வாழ... வாழும் கலை அமைப்பு சார்பில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கான நிகழ்ச்சி - காலை 6:00 முதல் 8:00 மணி வரை. இடம்: பாபிஸ் கனோபி, ஹூன்சூர் சாலை, விஜயநகர், மைசூரு. லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி தோட்டக்கலை துறை சார்பில் மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி - காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: லால்பாக் தாவரவியல் பூங்கா, பெங்களூரு. சட்டத்திருவிழா சாம்பா கல்வி நல அறக்கட்டளை மற்றும் சாம்பா சட்டப்பள்ளி சார்பில் முதலாம் ஆண்டு சட்டத்திருவிழா - காலை 10:30 மணி. இடம்: பள்ளி வளாகம், ராஜராஜேஸ்வரி நகர், மைசூரு. ஆயுர்வேத முகாம் காவேரி ஆயுர்வேத கல்லுாரி, மருத்துவமனை சார்பில் இலவச சிகிச்சை முகாம் - காலை 9:30 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: மருத்துவமனை வளாகம், தேவகவுடா சதுக்கம் அருகில், கே.பி.எல்., லே - அவுட், மைசூரு. தொடர்புக்கு 91317 99317.
24-Jun-2026