உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம் ஆண்டு விழா  ஆதிபராசக்தி சக்தி சக்தி பீடம் கோவில் 43ம் ஆண்டு விழாவை ஒட்டி, வரமஹாலட்சுமி திருவிழாவை ஒட்டி, இலவச திருமணம், சஷ்டியப்த பூர்த்தி - 10:00 மணி; 72 அடி உயர அலங்கார தேர் பவனி - 11:00 மணி. இடம்: ஸ்ரீ ஆதிபராசக்தி சக்தி சக்தி பீடம் கோவில், ஜீவன் பீமா நகர். திருக்குடை வழங்கல்  ஹிந்து ஆத்யாத்மிகா சேவா அறக்கட்டளை சார்பில் திருப்பதி திருமலையில் நடக்கும் வருடாந்திர பிரம்மோத்சவத்துக்கு நன்கொடையாக நான்கு திருக்குடை ஊர்வலம் - காலை 9:00 மணி. இடம்: ஸ்ரீ பாலாஜி கோவில், ராமமர்த்தி நகர் பிரதான சாலை, தொட்ட பானஸ்வாடி. லேசர் ஷோ  அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது புகைப்பட கண்காட்சி  பெங்களூரு போட்டோ ஜெர்னலிஸ்ட் சங்கம் சார்பில் உலக புகைப்பட தினத்தை ஒட்டி 'பிரோசன் மெமரீஸ்' புகைப்பட கண்காட்சி - காலை 9:00 மணி. இடம்: சித்ரகலா பரிஷத், பெங்களூரு. விற்பனை, கண்காட்சி  சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133. நாடக பயிற்சி முகாம்  கவுதமா கல்வி மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை சார்பில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு மாத காலம் நாட்டுப்புறவியல், இசை, நாடக பயிற்சி முகாம் - மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, வார இறுதி நாட்களில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: ரங்காயன வளாகம், பி.வி.காரந்த், மைசூரு. தொடர்புக்கு 96320 73716, 76187 39343. கண்காட்சி  பெங்களூரில் உள்ள இத்தாலியின் துணை துாதரகமும், தேசிய கலைக்கூடமும் இணைந்து 'ஒரு தாய் பல தாய் மொழிகள்' என்ற தலைப்பில், பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 'ஓவியங்கள், சிலைகள்' கண்காட்சி - செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை; சனிக்கிழமை, ஞாயிறுகளில் காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தேசிய கலைக்கூடம், பெங்களூரு. தொடர்புக்கு ngma.gmail.comஎன்ற மின்னஞ்சலில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்