உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம் ஆவணி பிரதோஷம்  ஆவணி மாத வளர்பிறை பிரதோஷத்தை ஒட்டி, பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.  நந்திக்கு அபிஷேகம், பூஜை, மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - மாலை 5:00 மணி. இடம்: ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவில், சிவாஜி நகர்.  மஹா ருத்ராபிஷேகம், பால், பஞ்சாமிர்த அபிஷேகம், பால் அபிஷேகம், சிறப்பு பிரதோஷ அபிஷேகம், தீர்த்த பிரசாதம் வழங்கல் - மாலை 3:30 மணி. இடம்: ஸ்ரீ சதாசிவா கோவில், லிங்கராஜபுரம்.  நந்தி, சோமேஸ்வரருக்கு அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களராத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ சோமேஸ்வரர் கோவில், ஹலசூரு.  ஏகாம்பரீஸ்வரர், நந்திக்கு அபிஷேகம், ஏகாம்பரீஸ்வரர் - காமாட்சி சமேத பிரகார உத்சவம் - மாலை 4:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ ஏகாம்பரீஸ்வரர் தருமராஜா கோவில், சிவாஜி நகர்.  நந்தி, விஸ்வநாதேஸ்வரர், விசாலாட்சிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், விஸ்வநாதேஸ்வரர் - விசாலாட்சி சமேத பிரகார உத்சவம் - மாலை 4:30 முதல் 6:30 மணி வரை. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர்.  அபிஷேகம் - இரவு 7:30 மணி. இடம்: ஸ்ரீ பஞ்சலிங்க நாகேஸ்வரர் கோவில், பேகூர், பெங்களூரு.  அபிஷேகம் - மாலை 4:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி; பல்லக்கு உத்சவம் - 8:30 மணி. இடம்: ஸ்ரீ சித்தி விநாயகர் கோவில், தம்பு செட்டி சாலை, காக்ஸ்டவுன்.  அபிஷேகம் - மாலை 5:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: கவி கங்காதேஸ்வரா கோவில், கவிபுரம், பசவனகுடி.  அபிஷேகம் - மாலை 6:30 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ காடு மல்லிகார்ஜுனா கோவில், மல்லேஸ்வரம். லேசர் ஷோ  அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது விற்பனை, கண்காட்சி  சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133. நாடக பயிற்சி முகாம்  கவுதமா கல்வி மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை சார்பில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு மாத காலம் நாட்டுப்புறவியல், இசை, நாடக பயிற்சி முகாம் - மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, வார இறுதி நாட்களில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை. இடம்: ரங்காயன வளாகம், பி.வி.காரந்த், மைசூரு. தொடர்புக்கு 96320 73716, 76187 39343. கண்காட்சி  பெங்களூரில் உள்ள இத்தாலியின் துணை துாதரகமும், தேசிய கலைக்கூடமும் இணைந்து 'ஒரு தாய் பல தாய் மொழிகள்' என்ற தலைப்பில், பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 'ஓவியங்கள், சிலைகள்' கண்காட்சி - செவ்வாய் முதல் வெள்ளி வரை காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை; சனிக்கிழமை, ஞாயிறுகளில் காலை 11:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: தேசிய கலைக்கூடம், பெங்களூரு. தொடர்புக்கு ngma.gmail.comஎன்ற மின்னஞ்சலில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இசை  கன்னடா ஜாமிங் - இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம்.  மண்டே மேட்னஸ் - இரவு 8:00 முதல் நள்ளிரவு 12:00 மணி வரை. இடம்: நோ லிமிட்ஸ் லாஞ்சு அண்ட் கிளப், 8, அல்லயடு கிராண்ட் பிளாசா, மக்ரத் சாலை, அசோக் நகர். காமெடி  வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.  மிட் நைட் காமெடி ஷோ - இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை