ஆன்மிகம் மஹா சங்கடஹர சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தியை ஒட்டி, கணபதி ஹோமம், அபிேஷகம், அலங்காரம், மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - மாலை 5:30 மணி முதல். இடம்: மஹான் ஸ்ரீ ஒடுக்கத்துார் சுவாமிகள் மடம், கங்காதர செட்டி சாலை, ஹலசூரு. சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம் - காலை 8:00 மணி; மஹா கணபதி சஹஸ்ர மோதக ஹோமம் - 10:00 மணி; சஹஸ்ரநாம அர்ச்சனை - மாலை 6:00 மணி; மஹா மங்களாரத்தி - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ லேக்வியூ மஹா கணபதி கோவில், டாங்க் சாலை, ஹலசூரு ஏரி அருகில். சிறப்பு அபிஷேகம், பூஜைகள் - மாலை 6:00 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர். அபிஷேகம், ஹோமம், மஹாமங்களாரத்தி, பிரசாதம் வழங்கல் - மாலை 6:00 மணி முதல். இடம்: ஸ்ரீ தண்டுமாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர். துாய ஆரோக்கிய அன்னை பெருவிழா துாய ஆரோக்கிய அன்னை பெருவிழாவை ஒட்டி, தமிழில் திருப்பலி - அதிகாலை 5:30, 8:00, 10:00, மதியம் 3:45, இரவு 7:30 மணி; ஆங்கிலத்தில் திருப்பலி - காலை 7:00, 11:00, மதியம் 3:00, இரவு 9:00 மணி; கன்னடத்தில் திருப்பலி - காலை 6:15, 9:00, மதியம் 12:00, மாலை 4:30, இரவு 8:15 மணி; கொங்கனியில் திருப்பலி - மதியம் 1:30 மணி; மலையாளத்தில் திருப்பலி - மதியம் 2:15 மணி. இடம்: துாய ஆரோக்கிய அன்னை தேவாலயம், சிவாஜி நகர். லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது விற்பனை, கண்காட்சி சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133. நாடக பயிற்சி முகாம் கவுதமா கல்வி மற்றும் கலாசார சேவை அறக்கட்டளை சார்பில் கல்லுாரி மாணவர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஒரு மாத காலம் நாட்டுப்புறவியல், இசை, நாடக பயிற்சி முகாம் - மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, வார இறுதி நாட்களில் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை; மறையுரை, கொடியேற்றம் - மாலை 5:30 மணி; நற்கருணை ஆசிர் - 6:30 மணி. இடம்: ரங்காயன வளாகம், பி.வி.காரந்த், மைசூரு. தொடர்புக்கு 96320 73716, 76187 39343. இசை கன்னடா ஜாமிங் - இரவு 8:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சிலா தி கார்டன் கபே, 14வது குறுக்கு சாலை, சம்பிகே சாலை, மல்லேஸ்வரம். கரோக்கி லைவ் - இரவு 8:00 முதல் 10:00 மணி வரை. இடம்: ஹார்டு ராக் கபே, 40, செயின்ட் மார்க்ஸ் சாலை, சாந்தாலா நகர், அசோக் நகர். காமெடி வைல்டு காமெடி நைட்ஸ் - இரவு 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1018, 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. மிட் நைட் காமெடி ஷோ - இரவு 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன்ஸ், சர்ச் தெரு, அசோக் நகர்.