உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சுற்றுலா மினி பஸ் விபத்து; கேரள மாணவர்கள் காயம்

 சுற்றுலா மினி பஸ் விபத்து; கேரள மாணவர்கள் காயம்

விஜயநகரா: விஜயநகராவின் ஹம்பிக்கு வந்த தனியார் மினி பஸ் கவிழ்ந்து, கேரள மாணவர்கள் காயம் அடைந்தனர். கேரளாவை சேர்ந்த பள்ளி மாணவ - மாணவியர் 20 பேர், ஆசிரியர் - ஆசிரியையுடன் கர்நாடக மாநிலம், விஜயநகரா மாவட்டம், ஹம்பிக்கு நேற்று முன்தினம் இரவு கல்வி சுற்றுலா புறப்பட்டனர். நேற்று காலை ஹம்பி அருகில் கூட்லகி அருகே வரும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், தாறுமாறாக ஓடி, சாலை டிவைடரில் மோதி சாலை ஓரத்தில் கவிழ்ந்தது. இதை பார்த்த அப்பகுதினர், பஸ்சில் சிக்கிய மாணவர்களை மீட்டனர். தகவல் அறிந்த கூட்லகி போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று மீட்கப்பட்ட மாணவர்களை, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேவேளையில், ஆசிரியை ஒருவரின் காலில் பலத்த காயம் அடைந்ததால், நடக்க சிரமப்பட்ட ஆசிரியை, பல்லாரி பிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ