உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பள்ளத்தில் விழுந்து தவித்த சுற்றுலா பயணிக்கு சிகிச்சை

 பள்ளத்தில் விழுந்து தவித்த சுற்றுலா பயணிக்கு சிகிச்சை

விஜயநகரா: ஹம்பிக்கு சுற்றுலா வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி, மலை ஏறும் போது தவறி பள்ளத்தில் விழுந்தார். 48 மணி நேரம் தவித்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ப்ரூனோ ரோஜர். இவர் விஜயநகரா மாவட்டம் ஹொஸ்பேட்டில் உள்ள பிரசித்தி பெற்ற ஹம்பிக்கு சுற்றுலா வந்திருந்தார். டிசம்பர், 24ம் தேதி, மாலை 6:00 மணியளவில் மஹாநவமி மேட்டுப்பகுதி அருகிலுள்ள குன்றின் மீது ஏற முயற்சித்த போது, கால் தவறி பள்ளத்தில் விழுந்தார். காலில் பலத்த அடிபட்டதால், அவரால் மேலே ஏறி வர முடியவில்லை. 48 மணி நேரம் உணவு, தண்ணீரின்றி பள்ளத்திலேயே விழுந்து கிடந்தார். அதன்பின், எப்படியோ, அங்கிருந்து மேலே ஏறி, அருகில் உள்ள வாழை தோட்டத்துக்கு வந்தார். அவரை பார்த்த விவசாயிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசாரும், தொல்பொருள் துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர். புரூனோ ரோஜரை மருத்துவமனையில் சேர்த்தனர். பிரான்சில் இருந்து தனியாக வந்த இவர், கட்டிராம்புராவில் உள்ள ஹோம் ஸ்டேவில் தங்கியிருந்தது தெரிய வந்தது. மருத்துவமனையில் அவருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரது உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி