உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஹனிடிராப் விவகாரம் வெளிப்படை தேவை

ஹனிடிராப் விவகாரம் வெளிப்படை தேவை

பெங்களூரு : ''ஹனிடிராப் விவகாரத்தில் வெளிப்படையான விசாரணை வேண்டும்,'' என, ம.ஜ.த., இளைஞர் அணி தலைவர் நிகில் கூறி உள்ளார்.பெங்களூரு, சேஷாத்திரிபுரத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி: ஹனிடிராப் விஷயத்தில் சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.தனிநபர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவது சரியல்ல. இச்சம்பவத்திற்கு பின்னணியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கேதகானஹள்ளியில் நில ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை. இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் சேகரித்துவிட்டேன். விரைவில் செய்தியாளர் சந்திப்பில் ஆதாரங்களை வெளியிடுவேன்.இன்றைய கால கட்டத்தில் குற்றம் சுமத்தப்பட்டவுடன், குற்றவாளி ஆகிவிடுகின்றனர். ராம்நகர் மாவட்டத்தின் பெயரை மாற்றினால் மட்டும் வளர்ச்சி கிடைத்துவிடுமா? பெயரை மாற்ற குமாரசாமி தடுப்பதாக கூறுவதற்கு ஏதேனும் ஆதாரம் உள்ளதா?ஸ்மார்ட் மீட்டர் டெண்டரில் 7,500 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. கருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு டெண்டர்கள் வழங்கப்பட்டு உள்ளன. காங்கிரஸ் அரசின் ஒவ்வொரு செயலிலும் ஊழல் நிறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி