உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மரங்கள் எண்ணிக்கை அதிகாரிகள் கை விரிப்பு

 மரங்கள் எண்ணிக்கை அதிகாரிகள் கை விரிப்பு

பெங்களூரு: 'பெங்களூரில் உள்ள மரங்களின் எண்ணிக்கை குறித்த விபரம் இல்லை,' என மாநகராட்சியின் வனப்பிரிவு அதிகாரிகள் கூறினர். பெங்களூரில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் கடந்த ஜூலை வரை, பொது மற்றும் தனியார் இடங்களில் உள்ள 6,000க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியா கின. இது, சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் சீற்றத்தை ஏற்படுத்தியது. இது குறித்து, பெங்களூரு மாநகராட்சியின் வனப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: பெங்களூரில் உள்ள மரங்களின் எண்ணிக்கை குறித்த விபரம் இல்லை. இதற்கு காரணம், மரங்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தவில்லை என்பதே. முந்தைய காலங்களில் மரங்கள் குறித்த கணக்கெடுப்பு பணிகளின் போது, பல சிக்கல்கள் இருந்தன. நேரம் இழப்பு ஏற்பட்டது. எனவே, கடந்த 10 ஆண்டுகளாக மரங்கள் கணக்கெடுப்பு குறித்த, டெண்டர் நடக்கவில்லை. இருப்பினும், வார்டு வாரியாக மரங்கள் குறித்த விபரங்களை விரைவில் சேகரிப்போம். கடந்த ௧௦ ஆண்டுகளில் எத்தனை மரங்கள் வெட்டப்பட்டன என்பது குறித்த தரவு இல்லை. நடப்பாண்டில் ஜூலை வரை, மரங்களை வெட்டுவதற்காக ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் வந்தன. இவற்றில், பெரும்பாலான விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை