மேலும் செய்திகள்
ரத்த தானம் செய்யுங்கள் தமிழக அரசு வேண்டுகோள்
01-Oct-2026
கல்லுாரி மாணவர்கள் ரத்த தானம்
03-Oct-2026
தேவனஹள்ளி: ரத்த தானம் செய்ய சென்ற, இரு வாலிபர்கள் விபத்தில் உயிரிழந்தனர். பெங்களூரு ரூரல் மாவட்டம், தொட்டபல்லாபூர் தாலுகா பஷெட்டிஹள்ளி கிராமத்தில் வசித்தவர்கள் தனுஷ், 20, சேத்தன், 24. இவர்கள் அவசர தேவைக்கு யாருக்காவது ரத்தம் தேவைப்பட்டால், உடனடியாக ரத்த தானம் செய்வர். தேவனஹள்ளி தாலுகா விஸ்வநாதபுரா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு அவசரமாக ரத்தம் தேவைப்பட்டால், ரத்த தானம் செய்ய தனுஷும், சேத்தனும் நேற்று முன்தினம் நள்ளிரவு பைக்கில் சென்றனர். தேவனஹள்ளி அருகே பையதரஹள்ளி கேட் பகுதியில் சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. பைக்கில் இருந்து துாக்கி வீசப்பட்ட தனுஷ், சேத்தன் சம்பவ இடத்திலேயே இறந்தனர். விஸ்வநாதபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தையும், அதன் டிரைவரையும் தேடுகின்றனர்.
01-Oct-2026
03-Oct-2026